×

வார்னே குறித்து ரிக்கிபாண்டிங் உருக்கம்

தாய்லாந்திற்கு இன்ப சுற்றுலா சென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஷேன் வார்னே, அங்கு கடந்த 4ம்தேதி மாரடைப்பால் இறந்தார். இது உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொடர்ந்து வார்னேவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து, அவரது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் வார்னேவின் நெருங்கிய நண்பரான ரிக்கி பாண்டிங் நிருபர்களிடம் கண்ணீர்மல்க கூறியதாவது:- நான் தூங்கி எழுந்து மனைவி, குழந்தைகளுடன் விளையாட செல்ல தயாராக இருந்தபோது எனது போனை எடுத்துப் பார்த்தேன். அப்போது அதில் வந்திருந்த ஒரு மெசேஜை பார்த்தேன். அதை (வார்னே இறந்ததை) நான் நம்பவே இல்லை. அதன்பிறகு சிலரிடம் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டேன். அந்த நிமிடங்களில் எனக்கு பேச்சே வரவில்லை. வார்னே குறித்த நினைவுகள் நிழலாடிக்கொண்டே இருந்தது. அவரும் நானும் ஒன்றாக பயணித்ததை பற்றியும், எங்களது அனுபவங்கள் பற்றியும் நினைத்துக் கொண்டே இருந்தேன். அவருக்கான அஞ்சலி நிகழ்ச்சியை டி.வி.யில் பார்த்தபோது, அவரது பேச்சு குரல் கேட்டதும் என்னால், துக்கத்தை அடக்க முடியவில்லை. உடனே டிவியை அணைத்துவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்….

The post வார்னே குறித்து ரிக்கிபாண்டிங் உருக்கம் appeared first on Dinakaran.

Tags : Ricky Bonding ,Warne ,Shane Warne ,Thailand ,
× RELATED சில்லிபாயின்ட்…